சஜித், கோத்தபாயவிற்கு என்ன செய்ய வேண்டும்? திருமாவளவன்

Report Print Sujitha Sri in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாஸவிற்கோ அல்லது பொதுஜன பெரமுனவின் கோத்தபாய ராஜபக்சவிற்கோ தமிழர்கள் வாக்களிப்பதன் மூலம் அவர்களது ஜனநாயகம் பாதுகாக்கப்பட போவதில்லை என தமிழக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

எமது செய்தி சேவைக்கு பிரத்தியேகமாக கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில், தொடர்ச்சியாக சிங்கள ஆட்சியின் போது தமிழர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தார்கள்.

அவர்களுக்கு அநீதி விளைவிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர் இம்முறை ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்கள் சிந்தித்து தமது வாக்கை உபயோகிக்க வேண்டும் என்பதே தனது கருத்து என சுட்டிக்காட்டினார்.