ஜனாதிபதி வேட்பாளருக்கு கல்வித் தகமை அவசியம் தேவை: ஆனந்தசங்கரி கோரிக்கை

Report Print Gokulan Gokulan in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளருக்கு வயதெல்லை கட்டாயமாக்கப்பட்டதை போல கல்வித் தகமையும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவருமான ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணியின் நிலைப்பாடு தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கடந்த 15 ஆண்டுகாலமாக பலரும் ஏற்றுக்கொள்ள கூடிய தீர்மானத்தையே கோரிக்கையாக முன்வைத்து வருகிறேன்.

இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு அந்நாட்டு அரசு எவ்வாறு அதிகாரங்களை வழங்கியுள்ளதோ அதே போல ஒரு தீர்வைத்தான் நாங்களும் முன்வைக்கிறோம்.

இந்தத் தேர்தலில் ஒற்றையாட்சி, சமஷ்டி எனும் கோரிக்கையை முன்வைக்காத வேட்பாளரை நாம் ஆதரிப்போம்.

இதுவரையில் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்திய யாரிடமும் நாம் விரிவான பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை.

தமிழர்களின் வாக்குகள் தான் ஆட்சியை தீர்மானிக்கும் என்பதில் எனக்கு எந்தவித உடன்பாடும் கிடையாது.

தமிழ் தலைமைகள் சரியான முடிவுகளை எடுக்கும் போது சரியானவைகயாக எடுக்க வேண்டும்.

ஜனாதிபதி வேட்பாளருக்கு வயதை மாத்திரமன்றி கல்வித்தகுதியையும் கட்டாய தகமையாக பார்க்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கல்வித்தகமை வகுக்கப்படுவதை வரவேற்கின்றோம்.

எமது கோரிக்கைகளுக்கு ஏற்ற வேட்பாளர் இந்த தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கே நிச்சயமாக எமது ஆதரவை வழங்குவோம் என்று தெரிவித்தார்.