தம்பிக்கு கிடைத்த வெற்றி! பெரும் மகிழ்ச்சியில் அண்ணன் மஹிந்த

Report Print Vethu Vethu in அரசியல்

கோத்தபாய ராஜபக்ஷ தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கில் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளமை நியாயத்திற்கு கிடைத்த வெற்றி. இது மக்களின் வெற்றி. எங்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு நீதிமன்று சரியான பதிலை வழங்கியுள்ளது.

மக்களுக்கு இந்த உண்மை நிலை புரியும். எத்தனை வழக்குகள் போட்டாலும் எமது பயணம் தொடரும் என தெரிவித்துள்ளார்.

மேன் முறையீட்டு வழங்கிய தீர்ப்பினை அடுத்து மஹிந்த இந்தத் தகவலை வெளியிட்டார்.

தீர்ப்பு வெளியாகும் சந்தர்ப்பத்தில் இலங்கை கலைஞர்கள் சிலருடன் மஹிந்த சந்திப்பில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது தனது கையடக்க தொலைபேசி ஊடக தீர்ப்பை அறிந்துக்கொண்ட மஹிந்த தனது கைகளை மேலே தூக்கி “ஜயவேவா” என கோஷமிட்டுள்ளார்.

அத்துடன் கலைஞர்களுடனான சந்திப்பின் போது கிடைத்த தீர்ப்பானது அதிஷ்டம் என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.