கோத்தபாய வழக்கில் வெற்றி பெற்றாலும் மீண்டும் அதே வழக்கில் தடை வரலாம்!

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in அரசியல்

கோத்தபாய மீது தொடுக்கப்பட்டுள்ள கேஸ் புஸ்வாணமாகின்றதா? என்ற செய்தியை நேற்று தந்திருந்தோம். வழக்கில் முன்வைக்கப்பட்ட விவாதம் நாம் அந்தக் கட்டுரையில் தந்துள்ளோம். அதுதான் நடந்துள்ளது.

இப்போது கோத்தபாய வழக்கில் வெற்றி பெற்றாலும் மீண்டும் வழக்காளிகள் அப்பீல் செய்து கோத்தபாயவின் தேர்தல் வேட்பாளர் விண்ணப்பதை அப்பீல் வழக்கு முடியும் வரை ஒரு தடை உத்தரவு கோரி நிற்கலாம் .

அதாவது மஹிந்த அணியின் அதிபர் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சவின் இலங்கை குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி, சிவில் சமூக செயற்பாட்டாளர்களான பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர, காமினி வியாங்கொட ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று தள்ளுபடியானாலும் மீண்டும் அவர்கள் அப்பீல் செய்யலாம்.

அந்த அப்பீல் மனுவில் கோத்தாபய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மனு தேர்தல் செயலகத்தில் தாக்கல் செய்திருந்தால், அந்த விண்ணப்பத்தை இரத்து செய்து கேட்கலாம் .

அந்த வகையில் வழக்கு முடியும் வரை ஒரு தடை கோரலாம். அதனால் நைனா போட்டியிடும் வாய்ப்பு இல்லாமல் போகலாம்.

மற்றது கோத்தாவின் இரட்டை பிரஜா உரிமை சான்றிதழ் மற்றும் இலங்கை அடையாள அட்டைய ஆகியவற்றை மீண்டும் சவாலுக்கு உட்படுத்தலாம்.

இன்றில் இருந்து 4 வாரங்களுக்குள் மனுதாரர்கள் அப்பீல் செய்யலாம். ஆனால் மனுதாரர்களின் முக்கிய நோக்கம் கோத்தபாய தேர்தலில் களமிறங்குவதை தடுப்பதே என்பதால் திங்கள் காலையே அப்பீல் செய்து மறுநாள் தடை உத்தரவு பெறலாம்.

அதாவது வழக்காளிகள் அப்பீல் செய்து கோத்தபாய ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் விண்ணப்பம் செய்திருந்தால் அப்பீல் வழக்கு முடியும் வரை கோத்தாவின் வேட்பாளர் விண்ணப்பத்தை இரத்து செய்து தரும்படி ஒரு தடை கேட்கலாம் .

இப்படியொரு வாய்ப்பு சட்டத்தில் உள்ளது.

இப்படியொரு சிக்கல் வரும் என்றுதான் சமல் ராஜபக்ச சுயேட்சை வேட்பாளராக பணம் கட்டியுள்ளார் .

அப்போ கோத்தபாயவின் கனவு அம்போதானா ?

சிலவேளை சிவில் சமூக செயற்பாட்டாளர்களான பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர, காமினி வியாங்கொட ஆகியோர் அப்பீல் செய்யாமலும் விடலாம் .அப்படி விட்டால் கோத்தபாய தேர்தலில் குதிக்கலாம்.

எல்லாக் கூத்தும் 3 நாட்களுக்குத்தான் .அப்புறம் தேர்தல் மேளா!..