மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சியின் இறுதி முடிவு என்ன?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்பட வேண்டிய விதம் குறித்த இறுதி முடிவை நாளை இடம்பெறும், கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் எடுக்க தீர்மானிக்கப்படவுள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர், தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களை கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி செயலத்தில் இன்று (04) சந்தித்திருந்தர்.

இந்த சந்திப்பின் நிறைவில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதில் வழங்கிய போது,

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்பட வேண்டிய விதம் குறித்த இறுதி முடிவை நாளை இடம்பெறும், கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் எடுக்க தீர்மானிக்கப்படவுள்ளது என்றார்.