குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்! அனுரகுமார உறுதி

Report Print Steephen Steephen in அரசியல்

மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்கத்தின் கீழ் குற்றங்களை செய்தவர்களுக்கு தகுதி தராதரம் பாராது தண்டனை வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் அரசியல்வாதிகள், ஊழல், மோசடிகளில் நேரடியாக சம்பந்தப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் இந்த அரசியல்வாதிகளின் பயணத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். எமது தரப்பு ஆட்சிக்கு வந்த பின்னர், ஊழல், மோசடிகளில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராகவும் சட்டத்தை அமுல்படுத்துவோம். இது குறித்து சந்தேகம் கொள்ள தேவையில்லை.

மக்களின் வரிப் பணத்தில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளை இரத்துச் செய்ய வேண்டும். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மக்கள் பணத்தில் செலவிடும் எந்த தேவையும் இல்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers