இலங்கையில் உள்ள சிறுபான்மை இனத்தவருக்கு வேறு பெயர் வைத்த சஜித்

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர்கள், மலாயர் ஆகியோரை சிறுபான்மை இனத்தவர் எனக் கூறுவது தவறு எனவும் அவர்கள் ஏனைய இனத்தவர்கள் என அழைக்கப்பட வேண்டும் எனவும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஹொட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பல இடங்களில் சிறுபான்மை இனத்தவர் என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர். நான் சிறுபான்மை இனம் என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டேன்.

ஏனைய இனத்தவர் என்றே அவர்களை அடையாளப்படுத்துவேன். நாட்டில் வாழும் அனைவருக்கும் ஒரு அபிமானம் இருக்கின்றது. சிறுபான்மை என்று கூறும் போது சற்று தாழ்ந்ததை போன்றது என்பது எனது உணர்வு எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.