நாட்டு மக்களிடையே குழப்ப நிலையை உருவாக்க முயற்சிக்கும் சுதந்திரக் கட்சியினர்! ஹரின் பெர்னாண்டோ

Report Print Gokulan Gokulan in அரசியல்

எம்மால் இலகுவாக கோத்தபாய ராஜபக்சவை தோற்கடிக்க முடியும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசியலில் 70 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் வரலாற்றை கொண்ட கட்சியான ஐ.தே.கவிற்கு எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் தடையாக இருக்கும் அவசியம் எதுவும் இல்லை.

நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு முன்பு நாம் நாட்டின் ஜனநாயகத்தை பலப்படுத்தினோம்.

இப்போது நாங்கள் எங்கள் கட்சித் தலைமையின் ஆசீர்வாதங்களுடன் வெற்றிகரமான பயணத்தில் இருக்கிறோம்.

சுதந்திரக் கட்சியினர் நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று கூறி நாட்டு மக்களிடையே குழப்ப நிலையை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

நாட்டையும், மக்களையும் காப்பாற்றக்கூடிய ஒருவர் கோத்தபாய என்று சித்தரிக்கவே அவ்வாறு செய்கின்றனர்.

கோத்தபாயவிற்கு எதிராக முறைப்பாடு செய்தவர்கள் எமது கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல.

ஆனால் எமது கட்சியை சேர்ந்தவர்கள் அவருக்கு எதிராக இந்த முறைப்பாட்டை செய்திருந்தால் அதனை வாபஸ் பெற சொல்லியிருப்போம்.

ஏனெனில் எம்மால் இலகுவாக கோத்தபாயவை தோற்கடிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...