கோத்தபாயவுக்காக ஆஜராகிய பெருமளவு சட்டத்தரணிகள்

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் இலங்கை குடியுரிமையை சவால் விடுத்து தாக்கல் செய்த மனு விசாரணையின் போது பெருமளவு சட்டத்தரணிகள் அவர் சார்பில் ஆஜராகியுள்ளனர்.

நீதிமன்ற மண்டபத்திற்கு குறித்த சட்டத்தரணிகள் குழுவினர் அனைவரும் வருகைத்தந்திருந்தனர்.

இந்த மனு விசாரணை செய்யப்பட்ட நீதிமன்றத்தின் 301 வது அறை என்ற போதிலும் சட்டத்தரணிகளால் இட வசதி போதாமல் போயுள்ளது.

இதனால் அதிக வசதிகள் கொண்ட மிகப்பெரிய அறை ஒன்றில் இந்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ருமேஷ் டி சில்வா, காமினி மாரபன, அலி சபீர் உட்பட 300இற்காக அதிகமான சட்டத்தரணிகள் கோத்தபாயவுக்காக வருகை தந்திருந்தனர்.

Latest Offers