மகிந்த அணியுடன் இணைகின்றாரா சரத் பொன்சேகா?

Report Print Sujitha Sri in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூடிய விரைவில் மகிந்த அணியுடன் இணைந்து கொள்ளலாம் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 33 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

சஜித் பிரேமதாச, மகேஷ் சேனநாயக்க, குமார வெல்கம மற்றும் சமல் ராஜபக்ச உள்ளிட்ட 12 வேட்பாளர்கள் நேற்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் தேர்தலுக்கான பேச்சுவார்த்தைகள் மற்றும் பிரச்சார நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சந்தர்ப்பத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நாடு, இனம் மற்றும் மதம் குறித்து சரத் பொன்சேகாவுக்கு மிகவும் தெளிவான சிந்தனையுள்ளதால் அவர் மிக விரைவில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொள்வார் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...