சஜித்தின் வயிற்றில் சமஸ்டி வடை

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சில கருத்துக்கள் மூலம் அந்த கட்சியின் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு கிடைக்கும் என்பது தெளிவாகியுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவின் வெற்றி 95 வீதம் உறுதியாகியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ரணில் விக்ரமசிங்க விதித்துள்ள நிபந்தனைகள் ஒவ்வொன்றாக வெளி வர ஆரம்பித்து்ளளது.

நாட்டில் உள்ள பெரும்பான்மையானவர்கள் சமஸ்டியை எதிர்க்கின்றனர். சஜித்தின் வயிற்றில் சமஸ்டி வடை இருப்பதாக கிராமங்களில் உள்ள மக்கள் கூறுகின்றனர்.

சஜித் தூண்டிலில் மாட்டிக்கொண்டுள்ளார். மகிந்த கையை பிடித்து கோத்தபாயவை அழைத்து வந்தார். ரணில் விக்ரமசிங்க, ஹேமா பிரேமதாசவையே கையில் பிடித்துக்கொண்டு வந்தார் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...