புதிய ஜனாதிபதி சஜித் என்பது நிச்சயம்! சந்திப் சமரசிங்க

Report Print Mubarak in அரசியல்

சஜித் பிரேமதாஸவின் தலைமையின் கீழ் புதிய அரசாங்கம் ஆட்சியமைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் கொள்ள தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திப் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை - சுமேதகம பகுதியில் இன்று காலை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி மக்களுடனான சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், நாட்டு மக்களுக்கு அனைத்து சலுகைகளையும் வழங்கியது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதம மந்திரியுமான ரணில் விக்ரமசிங்கவே.

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு, வாழ்க்கை செலுவு குறைப்பு, எரிபொருள் விலை குறைப்பு மற்றும் அன்றாட பொருட்களின் விலைகள் என்பன கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளன.

முன்னைய அரசாங்கமான மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தையும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் புரியும்.

நாட்டில் சஜித் பிரேமதாஸவிற்கு மக்கள் அலை அலையாக திரண்டு விட்டார்கள். நிச்சயமாக புதிய ஜனாதிபதி சஜித்தே என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

அனைத்து சிறுபான்மை கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் திரண்டுள்ளார்கள். ஹக்கிம், றிஷாத், மனோகணேசன், திகாம்பரம் மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் சில சிறிய கட்சிகள் அனைத்தும் சஜித்தின் வெற்றிக்காக முன்வந்துள்ளன.

பொதுஜன பெரமுனைக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளும் வெள்ளை வான் கலாச்சாரம் மற்றும் ஊடக படுகொலைகள் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்காக அமைந்து விடக்கூடாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers