பால் சமத்துவத்துக்கான சட்டம் இயற்றப்படும் - சஜித் பிரேமதாச

Report Print Ajith Ajith in அரசியல்

தாம் ஜனாதிபதியானதும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரும் வகையில் புதிய வரித்திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். நேரடி வெளிநாட்டு முதலீடுகளின் மூலம் இலங்கையின் வேலைவாய்ப்பின்மையை நீக்க நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மகளிருக்கான சாசனம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்ட அவர் பால்சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் கருத்துரைத்த அவர், சமூக பொருளாதார பாதுகாப்பு தொடர்பிலும் கருத்தில் கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இலங்கையில் அரசியல்வாதிகள் தமது உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில்லை.

சர்வதிகாரி ஒருவர் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், சர்வதிகாரி ஒருவர் தேவையென்றால் ஏன் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

Latest Offers

loading...