கோத்தபாயவின் வழக்கின் பின்னால் ஐக்கிய தேசியக்கட்சி:பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு

Report Print Ajith Ajith in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஐக்கிய தேசியக்கட்சியின் உள்ளிடல் இருந்தது என்று பொதுஜன பெரமுன குற்றம் சுமத்தியுள்ளது.

கோத்தபாய ராஜபக்சவின் இரட்டை பிரஜைவுரிமையை சவாலுக்கு உட்படுத்திய வழக்கு தொடர்பிலேயே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்தக்குற்றச்சாட்டை ஐக்கிய தேசியக்கட்சி மறுத்துள்ள போதும் அந்தக்கட்சியின் முன்னிலை உறுப்பினர் ராஜித சேனாரத்ன இந்த வழக்கில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு தொடர்பிருப்பதை ஏற்றுக்கொண்டுள்ளதாக அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.

இனிவரும் காலங்களில் ஐக்கிய தேசியக்கட்சி இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Latest Offers

loading...