இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஒரே மேடையில் இன்று ஏறிய அரச தலைவர் வேட்பாளர்கள்: புறக்கணித்த கோத்தபாய

Report Print Rakesh in அரசியல்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக அரச தலைவர் வேட்பாளர்கள் (ஜனாதிபதி வேட்பாளர்கள்) ஒரே மேடைக்கு இன்று அழைக்கப்பட்டனர்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று மாலை 'மக்கள் மேடை' நிகழ்வு நடைபெற்றது. மார்ச் 12 அமைப்பு, பெப்ரல் அமைப்பு மற்றும் எவ்ரில் இளைஞர் வலையமைப்பு ஆகியன இணைந்து மக்கள் மேடை நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

அரச தலைவர் வேட்பாளர்கள் தமது கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.

ஒரே மேடையில் இருந்து கொள்கை ரீதியான விவாதத்தில் ஈடுபடுவதற்காக ஜனாதிபதி வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்ச, சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். எனினும், கோத்தபாய ராஜபக்ச இந்த விவாதத்தில் பங்கேற்கவில்லை.

சஜித்தும் அநுரகுமாரவும் தமது கொள்கை விளக்கங்களை 'மக்கள் மேடையில் தெரிவித்தார்கள்.