கோத்தபாய ராஜபக்சவிற்கே எனது ஆதரவு - அத்துரலிய ரத்தன தேரர்

Report Print Murali Murali in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் வெற்றியை தான் ஆதரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற விஜயதாரணி ஜாதிகசபாவின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார்.

விஜயதாரணி ஜாதிகசபா பல தேசிய அமைப்புகளால் உருவாக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது விஜயதாரணி ஜாதிகசபாவின் கொள்கை அறிக்கை கோத்தபாய ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...