பத்து உறுதிமொழிகளில் சஜித், அநுரகுமார திஸாநாயக்க கையெழுத்திட்டனர்!

Report Print Murali Murali in அரசியல்

நாட்டின் தூய்மையான 10 உறுதிமொழிகளில் ஜனாதிபதி வேட்பாளர்களாக சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒரே மேடைக்கு அழைக்கும் வகையில், மார்ச் 12 அமைப்பு, பெஃப்ரல் அமைப்பு மற்றும் எவ்ரில் இளைஞர் வலயமைப்பு ஆகியன இணைந்து மக்கள் மேடை நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

இந்த நிகழ்வு இன்று மாலை சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது. ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாக இருந்தது.

ஒரே மேடையில் இருந்து கொள்கை ரீதியான விவாதத்தில் ஈடுபடுவதற்காக, ஜனாதிபதி வேட்பாளர்களான கோத்தபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். எனினும், இந்த நிகழ்வில் கோத்தபாய ராஜபக்ச கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையிலேயே, நாட்டுக்கான தூய்மையான 10 உறுதிமொழிகளில் ஜனாதிபதி வேட்பாளர்களாக சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டவர்கள் கையெழுத்திட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...