கோத்தபாயவுக்கு ஆதரவு வழங்க தயாராகும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரபலம்

Report Print Vethu Vethu in அரசியல்

ஐக்கிய தேசிய கட்சியின் பிரபல அமைச்சர் ஒருவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிபந்தனை ஒன்றின் அடிப்படையில் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

பொது தேர்தலின் போது தேசிய பட்டியலில் அமைச்சுப் பதவி ஒன்று வழங்க வேண்டும் என்பதே அவரது நிபந்தனை என தெரியவந்துள்ளது.

எனினும் அந்த யோசனைக்கு கோத்தபாய ராஜபக்ச இணக்கம் வெளியிடாமையினால் மீண்டும் ஒரு முறை கலந்துரையாடல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த அமைச்சர் கடந்த காலங்களில் நாடாளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் ராஜபக்சர்களை பகிரங்கமாக விமர்சனம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...