51 சதவீத வாக்கு கிடைக்கப் போகும் அதிஷ்டக்கார ஜனாதிபதி வேட்பாளர் யார்?

Report Print Vethu Vethu in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை கோத்தபாய ராஜபக்ஷ பெறுவார் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கோத்தபாயவுக்கு 65 இலட்சம் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச ஆகியோருடன் இடம்பெற்ற நேற்று மாலை கலந்துரையாடலில் கூட்டணி குறித்து இணக்கம் ஏற்பட்டது.

எனினும் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பொது சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு இரண்டு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

தாமரை சின்னத்தின் கீழ் கோத்தபாயவுக்காக கட்டுப்பணம் செலுத்தியமையினால் தற்போது சின்னத்தை மாற்ற முடியாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த உள்ளூராட்சி தேர்தலில் 50 இலட்சம் வாக்குகளை பெற்ற நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சி என்பன 14 இலட்சம் வாக்குகளை பெற்றன.

மூன்று கட்சிகளும் ஒன்றிணைவதால் 65 இலட்சம் வாக்குகளை கோத்தபாய பெற்றுக் கொள்ள கூடிய வாய்ப்புகள் உள்ளது. இதன்மூலம் 51 வீத வாக்குகளை மிக இலகுவாக கோத்தபாயவினால் பெற முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

Latest Offers

loading...