கோத்தபாயவிற்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடரத் திட்டம்

Report Print Kamel Kamel in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கோத்தபாயவின் இரட்டைக் குடியுரிமைக்கு சவால் விடுக்கும் வகையில் பேராசிரியர் சந்திரகுப்த தெவனுவர மற்றும் காமினி வியாங்கொட ஆகிய சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 4ஆம் திகதி வழக்கை தள்ளுபடி செய்திருந்தது.

வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் எதிர்வரும் 7ஆம் திகதி குறித்த வழக்கு தொடர்பிலான பூரண தீர்ப்பினை அறிவிக்க உள்ளது.

பூரணமாக தீர்ப்பு அறிவிக்கப்பட்டதன் பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்ய காமினி வியாங்கொட மற்றும் சந்திரகுப்த தெவனுவர ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.

Latest Offers

loading...