வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய!

Report Print Vethu Vethu in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவில் கையெழுத்திட்டார்.

நாளையதினம் வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் இன்று சுபநேரத்தில் வேட்புமனு பத்திரத்தில் கையெழுத்திட்டார்.

இது தொடர்பான நிகழ்வு மிரிஹெனயிலுள்ள அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய சமல் ராஜபக்ஷவும் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.