மைத்திரியின் தீர்மானத்தால் உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும் மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுக்கும் தீர்மானத்தை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் எடுப்பது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாக இன்று காலை தெரியவந்துள்ளதை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கடும் கோபம் கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இறுதித் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம், நேற்று இரவு நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது.

அந்த தீர்மானம் இன்று மதியம் அறிவிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக எடுக்க வேண்டிய தீர்மானம் குறித்து முடிவுக்கு செய்ய சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று மாலை கூடியதுடன் இரவு 10.30 வரை அந்த கூட்டம் நடைபெற்றது.

வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதி தனது தீர்மானம் குறித்து அறிவிப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...