கருத்து முரண்பாடு காரணமாக இரத்துச் செய்யப்பட்ட சு.கட்சியின் செய்தியாளர் சந்திப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக எடுக்கும் நிலைப்பாடு குறித்து அறிவிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடான நிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கியது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாயவுக்கு ஆதரவளிப்பது எனவும் அடுத்த தேர்தல்களில் பொதுச் சின்னத்தில் போட்டியிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், கோத்தபாயவை ஆதரிப்பது சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Latest Offers

loading...