ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ள சிவாஜிலிங்கம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

இன்றையதினம் அவர் கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளார்.

மேலும், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் சார்பில் கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளார்.

மேலும், நாளைய தினம் இவர் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.