கோத்தாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த சந்ரகுப்த தேனுவரவுக்கு மரண அச்சுறுத்தல்

Report Print Ajith Ajith in அரசியல்

கோத்தபாயவுக்கு எதிராக நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த பேராசிரியர் சந்ரகுப்த தேனுவரவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆதரிக்கும் தரப்பில் இருந்தே இந்த மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தெனுவர, இலங்கையில் நீண்ட காலமாக சமூக அரசியல் செயற்பாட்டாளராக இருந்து வருகிறார்.

இந்தநிலையில் கோத்தபாயவின் இரட்டை பிரஜாவுரிமை பிரச்சினையை முன்வைத்து அவரும் செயற்பாட்டாளர் காமினி வியாங்கொடவும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

எனினும் வழக்கின் தீர்ப்பு கோத்தபாயவுக்கு சார்பாக அமைந்து விட்டது. இதனையடுத்து தமக்கு பலர் தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்ததாக தேனுவர குறிப்பிட்டுள்ளார்.

தாம் வாகனம் செலுத்தி சென்ற வேளையில் தம்மை முந்திச்சென்ற முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் இடம்பெற்றதாக தேனுவர குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் தமக்கு பொலிஸாரின் பாதுகாப்பை அவர் கோரியுள்ளார்.