வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி தேர்தலில் 41 பேர் போட்டி

Report Print Malar in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதன்முறையாக இவ் ஆண்டிலேயே ஜனாதிபதி தேர்தலுக்காக பெருந்தொகையானோர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தும் இறுதிதினம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

இன்றைய தினம் எட்டு பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ள நிலையில், இதில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் உள்ளடங்குவர்.

அந்தவகையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...