கோத்தபாயவுக்கு எதிரான வழக்கின் விசாரணை ரத்து

Report Print Ajith Ajith in அரசியல்

லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலரும் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்ஷா அமரிக்காவின் கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடுத்த விசாரணை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த வழக்கு தொடர்ந்தும் நடத்தப்படுமா அல்லது ரத்துச் செய்யப்படுமா? என்பதை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக வழக்கை தாக்கல் செய்த நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நிலையமான (சிஜேஏ) அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.

அஹிம்ஷா, கோத்தபாயவுக்கு எதிராக இந்த வருடம் ஏப்ரலில் வழக்கை தாக்கல் செய்தார்.

இதன் பின்னர் இடம்பெற்ற வாதப் பிரதிவாதங்களின்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக்ச வெற்றிப்பெற்றால் அவருக்கு ராஜதந்திர வரப்பிரசாதம் உண்டு என்று குறிப்பிடப்பட்டது.

எனினும் ஊடகவியலாளர்களை கொலை செய்த குற்றத்துக்காக கோத்தபாயவுக்கு ராஜதந்திர வரப்பிரசாதம் வழங்கப்படக்கூடாது என்று லசந்த விக்கிரமதுங்கவின் சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

Latest Offers

loading...