ஜனாதிபதியின் நெருங்கிய ஆதரவாளரது கட்சி சஜித்துக்கு ஆதரவு

Report Print Ajith Ajith in அரசியல்

ஊவா மாகாணத்தின் 80 வீதமான உள்ளுராட்சி சபைகளது ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஊவா மாகாண ஆளுநரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளருமான மைத்திரி குணரட்னவின் தலைமையிலேயே ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி இயங்கி வருகின்றது.

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற கட்சியின் கூட்டத்தின் போதே இந்த ஆதரவு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

எனினும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்கவேண்டும் என்பதில் இன்னும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி முடிவு எதனையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...