எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது

Report Print Gokulan Gokulan in அரசியல்

இலங்கை தேசத்தில் மீண்டுமொரு நல்லாட்சியை உருவாக்குவதற்காக சிறுபான்மை சமூகம் முன்வர வேண்டும் என பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை - இறக்கக்கண்டி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகத்தை பாதிக்காத வகையில் நல்லதொரு நிலையில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.

இந்த நாட்டில் தங்களது மதக் கடமைகளை நிறைவேற்றவும், இரவு நேரங்களில் சுதந்திரமாகவும் தலைநிமிர்ந்து நடக்கவும், ஒரு நிலையான நல்லாட்சியை உருவாக்க நாம் இந்த நாளில் இறைவனிடத்தில் பிரார்த்திக்க வேண்டும்.

இந்த தேர்தலில் சிறுபான்மை சமூகத்தின் வாக்கும் தேவை இதில் தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் வாக்குப் பலமும் தேவை இதனை உணர்ந்து கொண்டு நல்லாட்சியை உருவாக்குவோம்.

எமது நிலைப்பாடு ஒருமித்த ஆதரவுடன் இருக்க வேண்டும். இதில் திருகோணமலை மாவட்டம் ஜனாதிபதி தேர்தலில் பாரிய பங்கு வகிக்கிறது.

கடந்த கால தேர்தலின் படி ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு எமது மாவட்ட மக்கள் அளப்பறிய பங்கினை வகித்துள்ளார்கள். இதனை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

ஒரு தனி மனிதனாக நின்று கொண்டு நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாத்த ஒரு தலைமை என்றால் அது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் தான்.

இவர் மீது வீண் பழி சுமத்துவதற்காக அண்மைக்கால இனவாதிகள் எத்தனையோ குற்றச்சாட்டுகளையும், விசாரணைகளையும் நடத்தியுள்ளார்கள்.

எனினும் எவ்வித குற்றமும் அற்றவர் என பாதுகாப்பு தரப்பினரே உறுதிப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...