மஹிந்தவிற்கு இனி அதிகாரத்தைப் பெறுவதற்கு இடமில்லை! ரணில் சூளுரை

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இனி இடம்கிடையாது என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட தொகுதி அமைப்பாளர் கூட்டம் இன்று கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம் பெற்றது. இதன்போது உரையாற்றிய அவர்,

மக்களின் அடிப்படை பிரச்சினைகளை புரிந்துக் கொள்ளாதவர்கள் ஆட்சியமைப்பதால் எவ்வித பயனும் ஏற்படாது.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவே வெற்றிப் பெறுவார். ஜனாதிபதி தேர்தலின் வெற்றியினை தொடர்ந்து இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலிலும் வெற்றிப்பெற்று பெரும்பான்மை ஆதரவுடன் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கமே ஸ்தாபிக்கப்படும்.

நாட்டை அனைத்து துறைகளிலும் வீழ்ச்சியடைய செய்தவர்களே உரிய காலத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தினார்கள்.

ஜனநாயக ரீதியிலே ஆட்சியதிகாரத்தை பெற்றுக் கொண்டோம். பாரிய சவால்களுக்கு மத்தியில் தற்போது நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடைந்துள்ளது. இந்நிலையினை சீரழிக்க எவருக்கும் அனுமதி கிடையாது.

தேர்தலின் ஊடாக தமக்கான அரசாங்கத்தை தோற்றுவித்து அதனூடாக தமது வாழ்க்கையினை முன்னேற்றிக் கொள்ளவே நாட்டு மக்கள் ஜனநாயகமான முறையில் தேர்தலில் ஈடுப்படுகின்றார்கள்.

கடந்த அரசாங்கத்தினால் மக்களின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை, வாழ்க்கை செலவுகளும் குறைக்கப்படவில்லை.

மக்களின் அடிப்படை பிரச்சினைகளை புரிந்துக் கொள்ளாதவர்கள் ஆட்சியமைப்பதால் எவ்வித பயனும் ஏற்படாது என்றார்.

Latest Offers

loading...