கோத்தபாயவுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதில் சிக்கல்! இன்று ஏற்படவுள்ள நெருக்கடி

Report Print Vethu Vethu in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக மேலும் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த 4 மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் செயற்பாடகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு போதுமான தகுதிகள் இல்லை என்ற அடிப்படையில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.

குறிப்பாக கோத்தபாயவின் இரட்டை குடியுரிமை இன்று சவாலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Latest Offers

loading...