மைத்திரியின் கட்சியை இரண்டாக உடைத்தார் மஹிந்த! விக்கெட்டுகளை அள்ளும் கோத்தபாய

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானித்தால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ஷவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதற்கு சுதந்திர கட்சி ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

இதன் காரணமாக கட்சிக்குள் முரண்பாடுகள் வலுவடைந்துள்ள நிலையில், இரண்டாக பிரிந்து செயற்பட தயாராகி வருவதாக தெரிய வருகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தற்போது 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

இவர்களில் 11 உறுப்பினர்கள் கோத்தபாய ராஜபக்சவுக்கும், 6 உறுப்பினர்கள் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவாக ஐக்கிய தேசிய முன்னணியிலும் இணையத் தயாராகி வருகின்றனர்.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் இணைவது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அல்லது நாளை அறிவிக்கவுள்ளதாக சுதந்திர கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணி தொடர்பில் நேற்று இரண்டு தரப்பிற்கும் இடையில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுஜன பெரமுனவின் முதலாவது பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கமைய இணக்கப்பாடு ஒப்பந்தம் செய்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...