கோத்தாவை தோற்கடிக்க களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர்! விக்ரமபாகு கருணாரத்ன கூறும் விடயம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

கோத்தபாய ராஜபக்ஷவை தோல்வி அடைய செய்வதே தமது பிரதான குறிக்கோள் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

அதே சமயம் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக இம்முறை தாம் பாடுபட்டு செயல்படுவதாக அவர் எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டார்.

தமது கட்சியானது ஒருபோதும் தேர்தலில் வெற்றி பெற போட்டியிடவில்லை எனவும் கோத்தபாய ராஜபக்ஷவை தோல்வி அடைய செய்யும் நோக்கிலேயே இம்முறை தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் கூறினார்.

கோத்தபாயவை எதிர்த்து நிற்க கூடிய ஒரு சிறந்த வீரரையே தேர்தலில் போட்டியிட நவ சம சமாஜ கட்சி நிறுத்தி இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாடு பூராகவும் கோத்தபாயவுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து சஜித்தின் வெற்றியை உறுதி செய்ய போவதாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.