தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை!

Report Print Vethu Vethu in அரசியல்

தேர்தல் சட்டங்களை மீறி நடப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் சட்டங்களை மீறுவோர், தேர்தலில் அரச ஆதனங்களை பயன்படுத்துவோர், அரசியலில் ஈடுபடும் அரச ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசியல்வாதிகள் சட்டதிட்டங்களை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். ஊடகங்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சமநிலை போக்குடன் ஊடகங்கள் செயற்படுவது அவசியமாகும்.

சமூக ஊடகங்கள் ஊடாக தவறான பிரசாரம் அல்லது தவறான செய்திகளை செய்யாமல் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

வாக்களிக்கும் விதம் வாக்களிப்பதை படமெடுத்து வெளிப்படுத்தல் தடை செய்யப்பட்டுள்ளது .

வாக்களிப்புக்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் பிரச்சாரங்களையும் செய்ய முடியாது. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவில் இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது ஆணைக்குழுவின் தலைவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

Latest Offers

loading...