திசைகாட்டியை கையில் எடுக்கும் அனுரகுமார

Report Print Gokulan Gokulan in அரசியல்

மக்கள் சக்தி அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க இம்முறை ஜனாதிபதி தேர்தலின் போது திசைகாட்டி சின்னத்தில் போட்டியிட உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அவர் இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக மக்கள் சக்தி அமைப்பின் மூலம் போட்டியிடுகிறார்.

அதற்காக அவர் இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அந்த வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி இதுவரை காலமும் மணி சின்னத்தில் போட்டியிட்ட போதிலும் இம்முறை தேர்தலில் போட்டியிடும் சின்னம் குறித்து ஆலோசித்து வருவதாக கூறிவந்தது.

எவ்வாறாயினும் தற்பொழுது அவர் திசை காட்டி சின்னத்தில் போட்டியிட உள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers

loading...