மஹிந்தவின் ஆஸ்தான சோதிடரின் வீட்டில் வெடிப்பு சம்பவம் - அச்சமடைந்த மக்கள்

Report Print Vethu Vethu in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆஸ்தான சோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தனவின் வீட்டில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காலி - மாகால்ல பிரதேசத்திலுள்ள அவரின் வீட்டின் எரிவாயு தொட்டி ஒன்று வெடித்தமையினால் இரண்டு அறைகள் முழுமையாக பாதிப்படைந்துள்ளன.

இந்த சம்பவத்தின் போது வீட்டில் பாரிய வெடிப்பு சத்தம் கேட்டதுடன், கறுப்பு புகை அந்த பகுதியை மூடியுள்ளது.

இதன் காரணமாக வெடிகுண்டு வெடித்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

காலி துறைமுக பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் தீயணைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Latest Offers

loading...