மக்கள் எம் பக்கம்; பெரு வெற்றி உறுதி - சஜித் நம்பிக்கை

Report Print Rakesh in அரசியல்

"சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மக்களும் எம் பக்கம் நிற்கின்றார்கள். எனவே, ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாபெரும் வெற்றி உறுதி." என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுப் பத்திரங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"தொழில்நுட்ப வளர்ச்சியில் புத்துயிர் பெற்ற தாய்நாட்டைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் கைகோர்ப்போம். எங்கள் மாபெரும் வெற்றிச் செய்தியை அறிந்து இந்த உலகம் வியக்க வேண்டும்" - என்றார்.

அதன்போது அங்கு கூடியிருந்த ஏராளமான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் "வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி உறுதி" எனக் கோஷங்களை எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரங்களை வெளிப்படுத்தினர். பட்டாசு கொளுத்தியும் கொண்டாடினர்.

Latest Offers

loading...