மகிந்த வெளியிட்ட கருத்து! மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அமைச்சர்

Report Print Murali Murali in அரசியல்

நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவிப்பதை எண்ணி மகிழ்ச்சியடைவதாக நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

வெரலுப பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,

ஐக்கிய தேசியக் கட்சி அமெரிக்காவுக்கு நாட்டை தாரை வார்த்துள்ளதாகவும், அமெரிக்காவுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.

எனினும், அவர்களே, அமெக்காவில் இருந்த வந்த ஒருவரின் வெற்றிக்காக செயற்படுகின்றனர். ஆகையினால், இதற்கு பின்னால் உள்ள சூழ்ச்சி என்ன என்று தான் வினவுவதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல் முன்னாள் ஜனாதிபதி இல்லாமல் தேர்தல் மேடைக்கு அல்லது தொலைக்காட்சி விவாதம் ஒன்றுக்கு வருமாறு கோத்தபாய ராஜபக்ஷவுக்கு சவால் விடுப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

Latest Offers

loading...