சிவாஜிலிங்கத்திற்கும் எங்கள் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை: செல்வம் அடைக்கலநாதன் மறுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருக்கும் சிவாஜிலிங்கம் எங்கள் கட்சியினுடைய வேட்பாளர் அல்ல. கட்சியின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளராக அவரை கருத முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சிவாஜிலிங்கம் அறிவித்திருந்தார். இது தொடர்பில் யாழில் இன்று தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்குப் பதில் வழங்கிய அவர்,

கட்சிக்கும் அவருக்கும் சம்மந்தமில்லை. அவர் கட்சியில் எந்தவொரு முடிவையும் கேட்காமலே தான் போட்டியிடுகின்றார். நிச்சயமாக அவருக்கு எதிரான நடவடிக்கையை நாங்கள் எடுக்க இருக்கின்றோம்.

எமது கட்சிக்கும் சிவாஜிலிங்கம் எடுத்த முடிவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

பொது வேட்பாளர் என்ற ரீதியில் அவரும் பரிசீலிக்கப்படுவாரா என்பது தொடர்பாக எந்தவிதமான முடிவும் இதுவரையில் எடுக்கவில்லை.

எங்களைப் பொறுத்தமட்டில் சிவாஜிலிங்கம் எங்கள் கட்சியினுடைய வேட்பாளர் அல்ல. கட்சியின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளராக கருத முடியாது என்றார்.

Latest Offers

loading...