ஆதரவு கோரி அதிகாலையிலேயே மைத்திரியிடம் சென்ற சஜித்?

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கம தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பில் அறிந்துக் கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அதிகாலையிலேயே ஜனாதிபதி மாளிகைக்கு சென்றுள்ளார். ஜனாதிபதியை சந்தித்து தனக்கு ஆதரவு வழங்குமாறு கோரியுள்ளார்.

தற்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து பிரபலங்களும் ஜனாதிபதியின் காலில் விழுந்துக் கொண்டிருப்பதாக மஹிந்தானந்த அலுத்கம குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்காக ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.