அத்துரலியே ரதன தேரரும் ஹிஸ்புல்லாவும் ஒரே அணியில்!

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆதரித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

சிங்கள பௌத்தர்களுக்காக குரல் கொடுப்பவர் எனக் கூறிக்கொள்ளும் அத்துரலியே ரதன தேரர் , கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவளித்து வருகிறார்.

மறுபுறம் முஸ்லிம் மக்களின் வாக்குகள் சஜித் பிரேமதாசவுக்கு கிடைப்பதை தடுக்கவே கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஜனாதிபதித் தேர்தலில் போட்டிடுகிறார்.

கோத்தபாயவுக்கு ஆதரவளிக்கவே அவர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டு வந்த அத்துரலியே ரதன தேரரும், ஹிஸ்புல்லாவும் ஒரே அணியில் இருந்து செயற்படுகின்றனர் எனவும் துஷார இந்துனில் குறிப்பிட்டுள்ளார்.