தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 103 முறைப்பாடுகள்

Report Print Kamel Kamel in அரசியல்

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 103 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரையில் தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் இவ்வாறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும் எண்ணிக்கையிலானவை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நேற்றைய தினம் முறைப்பாடு செய்யப்பட்டவை என கபே அமைப்பின் பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் 96 முறைப்பாடுகளும் அதற்கு முன்னதாக 7 முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மூன்று வேட்பாளர்களின் சுவரொட்டிகளே அதிகளவில் நாடு முழுவதிலும் காணக்கிடைத்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் ஓர் வேட்பாளரின் சுவரொட்டிகள் மீது கழிவு எண்ணெய் வீசப்பட்டிருந்தமை குறித்தும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.