சிவாஜிலிங்கத்தை களமிறக்கியது பசில் - சிங்கள இணையத்தளம்

Report Print Steephen Steephen in அரசியல்
1088Shares

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்சவே வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை எதிர்த்து கடுமையான பிரசாரத்தை மேற்கொள்ளும் பொறுப்பை, பசில் ராஜபக்ச, சிவாஜிலிங்கத்திற்கு வழங்கியுள்ளதாகவும் சிவாஜிலிங்கத்தின் இந்த பிரசாரத்தினால், சிங்கள மக்களை தூண்டி அந்த சாதகத்தை கோத்தபாயவுக்கு பெற்றுக்கொள்வதே இதன் நோக்கம் எனவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.

அத்துடன் சிவாஜிலிங்கம் 50 ஆயிரம் வாக்குகளை பெறுவார் என கணக்கிட்டுள்ள பசில், அவருடன் இணைப்பு நடவடிக்கைகளுக்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிபால அமரசிங்கவுக்கு வழங்கியுள்ளதாகவும் சிறிபால அமரசிங்க, பசில் ராஜபக்சவின் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு அதிகாரியாகவும் இருந்து வருகிறார் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது. சிறிபால அமரசிங்க, ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகவும் போட்டியிடுகிறார்.