நிறைவுக்கு வரும் ஊவா மாகாண சபையின் பதவிக்காலம்

Report Print Thirumal Thirumal in அரசியல்

ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது.

கடந்த 5 வருட காலப்பகுதியில் 5 ஆளுநர்களும், 3 முதலமைச்சர்களும் இந்த மாகாண சபையை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த மாகாண சபை தேர்தல் பெறுபேறிற்கு அமைவாக 34 உறுப்பினர்களுடன், 2 போனஸ் அங்கத்தவர்களைக் கொண்டதாக இது அமைந்திருந்தது.

இதில் 19 உறுப்பினர்கள் கூட்டமைப்பிற்கு உட்பட்டவர்களாவர். ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 13 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் 2 உறுப்பினர்களும் இந்த மாகாண சபையில் இடம்பெற்றிருந்தனர்.

சஸீந்திர ராஜபக்ச, ஹரின் பெர்னான்டோ ஆகியோருக்கு பின்னர் சாமர சம்பத் தஸநாயக்க முதலமைச்சராக பதவி வகித்தார்.

ஊவா மாகாண சபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.