வெற்றி பெற முடியாது என்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை! ஜனாதிபதி வேட்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்ற காரணத்தினாலேயே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வேண்டும் என்ற கடுமையான நிலைப்பாட்டில் தான் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவளித்தால், தான் குறுகிய காலத்திற்கு அரசியலில் இருந்து விலகி விடுவேன் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய குமார வெல்கம, வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.