தொண்டமானின் ஆதரவு சஜித்திற்கு

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் ஆதரவு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தொண்டமானுடன் சில சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது.

இதனை தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவும் சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்கும் எனவும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.