40 நாட்களில் சிறந்த விளையாட்டுக்களை காண முடியும் - சுஜீவ சேனசிங்க

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவளிக்கவே பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்புவதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று ஊடங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதியை நான் நேற்று சந்தித்தேன். பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக அவர் இதுவரை அறிவிக்கவில்லை. அப்பளுக்கற்ற சிறந்த தலைவர் தெரிவாக வேண்டும் என்பது ஜனாதிபதியின் நிலைப்பாடு. ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கு அதிகமானவர்களின் ஆதரவு கிடைக்கும் என்று ஜனாதிபதி கூறினார்.

சில அரசியல் முடிவுகளின் அடிப்படையில் நிலைப்பாடுகள் மாறலாம். எங்களது அணியில் அந்த பக்கம் தாவுவோரை இன்னும் காணக்கிடைக்கவில்லை. அந்த பக்கத்தில் இருந்து சிலர் எமது பக்கத்திற்கு வந்துள்ளனர். சுமார் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 40 நாட்கள் இருப்பதால், இந்த காலத்திற்குள் அவர்கள் தீர்மானத்தை எடுப்பார்கள். அப்போது சிறந்த விளையாட்டுக்களை காணமுடியும்.

கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான எந்த சட்டநடவடிக்கைகளிலும் சம்பந்தப்பட வேண்டாம் என சஜித் பிரேமதாச அனைவருக்கும் அறிவித்துள்ளார் எனவும் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.