குடும்பத்தை பாதுகாக்கும் தலைவரை மக்கள் தெரிவு செய்யக் கூடாது: சுனில் ஹந்துன்நெத்தி

Report Print Steephen Steephen in அரசியல்

குடும்பத்தை பாதுகாக்கும் தலைவரை விட நாட்டை பாதுகாக்கும் ஜனாதிபதியை மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தெரிவு செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

ஹொரணை மோரகஹாஹேன பிரதேசத்தில் இன்று நடைபெற்ற புரட்சியாளர் சேகு வேராவின் 52வது நினைவு தின நிகழ்வில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. யார் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அண்ணனுக்கு பின்னர் தம்பி போட்டியிடுகிறார்.

தம்பியின் வேட்புமனு நிராகரிக்கப்படும் பட்சத்தில் இன்னுமொரு அண்ணன் போட்டியிட தயாராகின்றார். குடும்பத்தினர் மட்டுமே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இப்படித்தான் எமது நாட்டின் தலைவர்கள் உருவாகி இருக்கின்றனர். அவர்கள் நாட்டுக்காக உழைக்கவில்லை. தமது குடும்பத்தினருக்காக உழைக்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செய்வதை அறியாது இருக்கின்றது. ராஜபக்ச நிறுவனம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதே இதற்கு காரணம்.

நாட்டுக்கு தலைவர் தேவை. குடும்பத்திற்கு தலைவர்கள் அவசியமில்லை. இதனால், அனுரகுமார திஸாநாயக்கவை தெரிவு செய்ய வேண்டும். அதேபோல், சமவுடமை குணாதிசயங்களுடன் அவர் நாட்டுக்கு தலைமை தாங்குவார் எனவும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.