அரசியல் பயணம் நவம்பர் 16 ஆம் திகதியுடன் முடியாது: மஹேஷ் சேனாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

தமது அணியின் அரசியல் பயணம் நவம்பர் 16 ஆம் திகதியுடன் முடிந்து விடாது எனவும் எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து முன்நோக்கி செல்ல போவதாகவும் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் இருக்கும் நாட்டின் ஊழியர்களாக இருப்பதே அரசியலில் பிரவேசித்துள்ளது தமது அணியினரின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சேனாநாயக்க இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான கொள்கை அறிக்கை தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில தினங்களில் அது மக்களுக்கு வழங்கப்படும்.

எமது அரசியல் பயணம் என்னது என்பதை அதன் மூலம் மக்கள் அறிந்து கொள்ள முடியும். தேசிய பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு என பல விடயங்கள் எமது கொள்கை விளக்கத்தில் அடங்கியுள்ளது.

நான் கட்சி சாராத சுயாதீனமான மக்கள் வேட்பாளர். தேசிய மக்கள் அமைப்பின் மக்கள் சபை போன்ற 30 அமைப்புகள் சார்பில் நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியி கட்சி அவசியம் என்பதால், தேசிய மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றேன்.

71 ஆண்டுகளாக நாட்டில் இருந்து வரும் அரசியல் கலாசாரம் காரணமாக நாடு முன்நோக்கி செல்லவில்லை.

பின்நோக்கியே பயணித்துள்ளது. தொடர்ந்தும் நாடு பின்நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது எனவும் மஹேஷ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.