டெலோ அமைப்பிலிருந்து சிவாஜிலிங்கம் நீக்கம்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள எம்.கே.சிவாஜிலிங்கம், டெலோ அமைப்பின் அங்கத்துவத்தில் இருந்து நீக்கியுள்ளதாக டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் வேட்புமனுவை தாக்கல் செய்த சந்தர்ப்பத்திலேயே கட்சியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டி அவரை உத்தியோகபூர்வமாக நீக்க உள்ளதாகவும் அடைக்கலநாதன் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினராக பதவி வகித்தார். அவர் டெலோ அமைப்பின் உறுப்பினர்.

டெலோ அமைப்பின் கொள்கை, சட்டத்திட்டங்களுக்கு முரணாக, எவ்வித முன்னறிவிப்பும் செய்யாது, அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார்.

சிவாஜிலிங்கத்திற்கும் டெலோ அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அமைப்பின் மத்திய செயற்குழு கூடிய அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்.

மேலும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். அதற்கு டெலோ அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அமைப்பின் கொள்கைகளுக்கு முரணாக வேட்புமனுவை தாக்கல் செய்தமை பெரிய தவறு. கட்டாயம் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers